இன்று நடக்கவிருந்த தொழிற்கல்வி பிரிவு கலந்தாய்வு, நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கு 30-ம் தேதி (இன்று) நடைபெறுவதால் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழக அரசு அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் 30-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு 31-ம் தேதி (நாளை) அதே நேரவரிசைப்படி நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.