தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம்; கட்சிப் பதவியும் பறிப்பு

செய்திப்பிரிவு

போக்குவரத்துத் துறை அமைச் சர் செந்தில்பாலாஜி, அமைச்சரவை யில் இருந்து நீக்கப் பட்டுள்ளார். அவரது மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவின் பரிந் துரையை ஏற்று ஆளுநர் ரோசய்யா இதற்கான அறிவிப்பை வெளி யிட்டார்.

இதுகுறித்து ஆளுநர் அலுவல கம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையை ஏற்று, தமிழக அமைச் சரவையில் இருந்து போக்குவரத் துத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த போக்குவரத்துத் துறை, தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணியிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் பதவியில் இருந்து மட்டுமல்லாமல், அதிமுக மாவட் டச் செயலாளர் பதவியில் இருந்தும் செந்தில்பாலாஜி நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து வி.செந்தில்பாலாஜி விடுவிக்கப்படு கிறார். அவருக்கு பதிலாக புதிதாக ஒருவர் நியமிக்கப்படும் வரை, நாமக்கல் மாவட்டச் செயலாளர் பி.தங்கமணி, கரூர் மாவட்ட பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்’ என தெரிவித்துள்ளார்.

காரணம் என்ன?

அமைச்சர் மற்றும் கட்சிப் பதவி யில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. ‘அதிமுக உள்கட்சி தேர்தலில், கரூர் தவிர அருகில் உள்ள மாவட் டங்களிலும் தனக்கு வேண்டியவர் களை நியமிக்க செந்தில்பாலாஜி முயற்சிப்பதாக சமீபத்தில் கொங்கு மண்டல அதிமுக எம்பி ஒருவரே தலைமையிடம் புகார் அளித்திருந் தார். மேலும், போக்குவரத்துக் கழ கங்களில் நேரடி நியமனம் தொடர் பாக பல்வேறு புகார்கள் வந்தன. இதனால், அவர் மீது கட்சித் தலைமை அதிருப்தி அடைந்தது’ என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT