தமிழகம்

இங்கிலாந்து நாட்டின் 5 செயற்கைகோள்களை தாங்கிய பிஎஸ்எல்வி-சி 28: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

செய்திப்பிரிவு

இங்கிலாந்தின் 5 செயற்கை கோள் களை தாங்கிய இந்தியாவின் பிஎஸ்எல்வி- சி 28 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 10-ம் தேதி விண்ணில் ஏவப் படவுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ நிறுவனம் தனது இணைய தளத்தில் கூறியுள்ளதாவது :

இங்கிலாந்தின் 5 செயற்கை கோள்களை இந்தியாவின் பிஎஸ்எல்வி- சி 28 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அந்த 5 செயற்கைகோள்களும் ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து வரும் 10-ம் தேதி விண்ணில் ஏவப்படவுள் ளன.

இங்கிலாந்தின் சர்ரே செயற்கைகோள்கள் தயாரிப்பு நிறுவனம் டிஎம்சி3-1, டிஎம்சி3-2, டிஎம்சி3-3 ஆகிய மூன்று செயற்கைகோள்களை தயாரித் துள்ளது. அந்த செயற்கை கோள்கள் மூன்றுமே தலா 477 கிலோ எடையுள்ளனவாகும். அவை 3 மீட்டர் நீளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர இங்கிலாந்தில் தயாரித்துள்ள சிபிஎன்டி-1 என்னும் 91 கிலோ எடை கொண்ட துணை செயற்கை கோளும், டி-ஆர்பிட்செல் என்னும் 7 கிலோ எடை கொண்ட நுண் செயற்கைகோளும் மேற்சொன்ன 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்படவுள்ளன.

பூமியில் உள்ள இயற்கை வளங்களை ஆய்வு செய்வது, பேரிடர்களை கண்காணிப்பது, புவி வளம், மண் வளம் போன்றவற்றை ஆய்வு செய்வது போன்ற பணிகளை இந்த செயற்கை கோள்கள் மேற்கொள்ளவுள்ளன.

இவ்வாறு இஸ்ரோ இணையதளத்தில் கூறப்பட்டுள் ளது.

SCROLL FOR NEXT