தமிழகம்

தனியார் ஆலை கழிவுநீரால் நிலத்தடிநீர் பாதிப்பு: காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

செய்திப்பிரிவு

ஆர்.கே. பேட்டை அருகே ஏரியில் கழிவு நீரை வெளியேற்றும் இரு தனியார் தொழிற்சாலைகளை மூடக் கோரி, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பெரும்பரபரப்பு ஏற் பட்டது.

ஆர்.கே.பேட்டை அருகே உள் ளது நிலோத்பாலாபுரம் (புத்தேரி). இக்கிராமத்துக்கு அருகே தனி யாருக்குச் சொந்தமான தோல் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலை கள் உள்ளன. இந்த தொழிற் சாலைகளில் இருந்து வெளியேற்றப் படும் கழிவுநீர், கால்வாய் மூலம் அப்பகுதியில் உள்ள ஏரியில் கலந்து, துர்நாற்றம் வீசுவதோடு நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது.

இதனால், ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தியதில் பல் வேறு உபாதைகளுக்கு பொது மக்கள் ஆளாகினர். மேலும், விவ சாயமும் பாதிக்கப்பட்டது. எனவே இந்த ஆலையை மூட அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன.

இதனையடுத்து, அந்த ஆலை களை ஆய்வுசெய்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், அவை உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனால் இரு தொழிற்சாலைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சில நாட்கள் இயங்காமல் இருந்த தொழிற் சாலைகள் தற்போது செயல்பட தொடங்கியது. இதை அறிந்த அப்பகுதி பெண்கள் உட்பட 400-க் கும் மேற்பட்டோர் நிலோத்பாலாபு ரம் பகுதியில் சோளிங்கர்- வேலூர் மாநில முதன்மை நெடுஞ்சாலையில் ஆலையை மூடக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த ஆர்.கே. பேட்டை வட்டார வளர்ச்சி அலுவ லர் விஜயகுமாரி, தனி வட்டாட் சியர் குமார், திருத்தணி டிஎஸ்பி பொற்செழியன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, ‘சம்பந்தப்பட்ட இரு தொழிற் சாலைகளின் இயந்திரங்களும் அப்புறப்படுத்தி, தொழிற்சாலை களை மூடி சீல் வைக்கப்படும்’ என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து தொழிற்சாலைகள் இயங்குவது நிறுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT