தொழிற்சாலை மற்றும் கட்டுமான விதிகளை அனைவரும் உறுதி யாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை செயலாளர் குமார் ஜெயந்த் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு பொறியாளர்கள் கூட்டமைப்பு (இந்தியா), மண்டல தொழிலாளர் மையம் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் இணைந்து நடத்திய பாதுகாப்பு வல்லுநர்கள், ஒழுங்குமுறை அமைப்புகளுடன் கலந்துரையாடும் கூட்டம் சென்னை அடையாறில் உள்ள மண்டல தொழிலாளர் மைய அரங்கில் நேற்று நடைபெற்றது.
மண்டல தொழிலாளர் மையத் தின் இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் ஆர்.கே.இளங்கோவன் வரவேற் புரை ஆற்றினார். அவர் தனது உரையில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கான முக்கியத்துவம் குறித்து விளக் கினார். மண்டல தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் சி.ஞான சேகர பாபுராவ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசுகை யில், ‘‘பாதுகாப்பு வல்லுநர்கள் சந்திப்புக் கூட்டம் தொழிற்சாலை பிரதிநிதிகளுக்கு ஒழுங்குமுறை அமைப்புகளுடன் நேரடியாக கலந்துரையாடி தொழில் பாது காப்பு தொடர்பான பல்வேறு சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது’’ என்றார்.
ஓய்வு பெற்ற தலைமை தொழிற் சாலை ஆய்வாளர் டி.வாசுதேவன் தனது உரையில், ‘‘தொழிற்சாலை சட்டங்கள் மற்றும் இது தொடர் பான வழக்குகள், தொழிற்சாலை பாது காப்பு மற்றும் கட்டுமான விதிகள் ஆகிய தலைப்புகள் குறித்து சிறந்த வல்லுநர்களை அழைத்து விவாதிக்க வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராக பங்கேற்ற தமிழக அரசு தொழி லாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் குமார் ஜெயந்த் பேசும்போது, ‘‘தொழிற்சாலை பாதுகாப்பு விதிகளை யாரும் பின்பற்றுவதில்லை. அதைப் பின் பற்றுவதால் தங்களுக்கு லாபம் இல்லை என நினைக்கின்றனர். தொழிற்சாலை மற்றும் கட்டுமான விதிகளை அனைவரும் உறுதி யாக பின்பற்ற வேண்டும். தொழிற் சாலையில் பாதுகாப்பு விதிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள் அதை முழுமையாக செய்ய வேண் டும். ஆய்வு முடிந்த உடன் அதற் கான அறிக்கையை 2 நாட்களுக் குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைக்க வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பாதுகாப்பு பொறியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.உலகநாதன் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், 150-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதி கள் பங்கேற்றனர்.