தமிழகம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு

செய்திப்பிரிவு

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் அருகே பத்ரகாளி என்னும் இடத்திலிருந்து 60 கிலோமீட்டர் தென்கிழக்கே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற சென்னை வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்துக்கு தற்போது பாதிப்பு ஏதும் இல்லை எனவும், ஆனால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று மீன் பிடிப்பதை தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT