தமிழகம்

12 பி அந்தஸ்து: பட்டங்கள் குறித்து அச்சம் தேவையில்லை - அவினாசி பல்கலை. ஆசிரியர் சங்கம் தகவல்

செய்திப்பிரிவு

‘12 பி அந்தஸ்து பெறாவிட்டால் கல்விக்கான உதவித் தொகை யில் பாதிப்பு ஏற்படுமே தவிர பட்டங்கள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை’ என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து அந்த சங்கத் தின் அவினாசிலிங்கம் பல் கலைக்கழக ஆசிரியர்கள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

யுஜிசி ஆணைப்படி 1972-ம் ஆண்டுக்கு முன்னரே தொடங் கப்பட்ட பல்கலைக்கழகங்கள் 12 பி அந்தஸ்து பெற வேண்டாம் என்று சொல்லி வந்தபோதும் 2010-ம் ஆண்டு முதல் 12 பி அந்தஸ்து பெறுவது எல்லா பல்கலைக்கழகங்களுக் கும் அவசியம் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

12 பி அந்தஸ்து இல்லாத கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவால் வழங்கப்படும் கல்விக்கான பல்வேறு உதவித் தொகைகள், ஆராய்ச்சிப் பணிக் கான நிதியுதவிகள் போன்றவை வழங்கப்பட மாட்டாதே தவிர, பட்டங்கள் குறித்து எவ்வித அச்சம் தேவையில்லை.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT