தமிழகம்

பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிட தேர்வு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தை சேர்ந்த பி.சதீஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்து ஏப்ரல் 22-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எழுத்துத் தேர்வு நடத்தப் பட்டாலும், நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படை யிலேயே பணி நியமனம் செய் யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த தேர்வு முறையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. அடிப்படை உரிமையை மீறுவதாகவும் உள்ளது. ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 31-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அனைத்து நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

உயர்நீதிமன்ற நீதிபதி டி.ஹரி பரந்தாமன் இவ்வழக்கை விசாரித்து, “ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப் படையில் நிரப்பப்பட மாட்டாது என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT