தமிழகம்

சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடல்சார் படிப்பு முடித்த 106 மாணவர்களுக்கு பயிற்சி நிறைவு விழா

செய்திப்பிரிவு

சென்னையை அடுத்த தாளம்பூரில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் படிப்புகளுக்கான கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கடல்சார் படிப்பு முடித்த மாணவர்களின் 7-வது ஆண்டு பயிற்சி நிறைவு விழா நடை பெற்றது.

மொத்தம் 106 மாணவர் களுக்காக பயிற்சி நிறைவு விழா நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சன்மார் ஷிப்பிங் நிறுவன செயல் துணைத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றுகளையும் விருதுகளையும் வழங்கினார்.

கே-லைன் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கோஜி ஹிகாஷிஜிமா, இயக்குநர் எஸ்.கோயல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ் வர வேற்புரையாற்றினார். இணை வேந்தர்கள் ஜோதி முருகன், ஆர்த்தி கணேஷ், பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, கடல்சார் கல்லூரி இயக்குநர் என்.குமார், ஒருங்கிணைப்பாளர் அஜித் சேஷாத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT