பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே 7 ஆண்டுகளாக மூடிக்கிடக் கும் ரயில் டிக்கெட் கவுன்ட்டரை முன்பதிவு மையமாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பு இயக்குநர் வி.ராமாராவ் கூறியதாவது:
தாம்பரம் கடற்கரை இடையே யான மின்சார ரயில் நிலை யங்களில் பழவந்தாங்கல் ரயில் நிலையம் முக்கியமானதாக உள்ளது. தினமும் லட்சக்கணக் கான மக்கள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகின் றனர். தாம்பரம் கடற்கரை இடை யிலான மீட்டர்கேஜ் ரயில் பாதையை பிராட்கேஜாக மாற்றும் பணிகள் நடந்தபோது, பழவந்தாங் கல் ரயில் நிலைய நடைமேம்பாலம் அருகில் தில்லைநகரில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு அதில் மின்சார ரயில்களுக்கான டிக்கெட் கள் வழங்கப்பட்டன.
பின்னர், பிராட்கேஜ் ஆக மாற்றிய பிறகு, மின்சார ரயில் டிக்கெட்டை பழவந்தாங்கல் ரயில் நிலைய நுழைவுவாயில் அருகே கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. டிக்கெட் கொடுக்க கட்டப்பட்ட கட்டிடம் கடந்த 7 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கிறது. இந்த கட்டிடத்தில் விரைவு ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி கொண்டு வந்தால், இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பழவந்தாங்கல் ரயில் பயணிகளின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து, பரிசீலிக் கப்படும்’’ என்றார்.