உயிரிழந்தவர்களின் கண்களை தானம் செய்ய விரும்புபவர்கள் 104 சேவை மையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக் கலாம் என்று அந்த மையத்தின் மேலாளர் பிரபுதாஸ் தெரிவித் துள்ளார்.
தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் 104 மருத்துவ உதவி சேவை மையம் 2013-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த மையத் தின் மூலம் மருத்துவ உதவிகள், முதல் கட்ட மருத்துவ சிகிச்சை, மருத்துவ ஆலோசனைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் கண்களை தானம் செய்வதற்கு 104 சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 104 மருத் துவ உதவி சேவை மையத்தின் மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:
உயிரிழந்தவர்களின் கண் களை தானம் செய்ய விரும் பும் உறவினர்கள், 104 சேவை மையத்தை அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களுடன், அருகில் உள்ள கண் வங்கிகளை இணைத்து விடுவோம். கண் வங்கியில் இருந்து டாக்டர்கள் வந்து கண்களை எடுத்துச் செல் வார்கள். உயிரிழந்த ஒருவர் கண்களை தானம் செய்வதால், இரண்டு பேருக்கு பார்வை கிடைக்கும். உயிரிழந்த வருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கண்புரை அறுவைச் சிகிச்சைச் செய்து இருந்தாலும், அவரது கண்களை தானம் செய்யலாம்.
6 மணி நேரத்துக்குள்..
கண் வங்கியில் இருந்து டாக்டர்கள் வரும் வரை, உயிரிழந்தவரின் தலைக்கு அருகில் உள்ள மின்விசிறியை அணைத்து வைக்க வேண்டும். பஞ்சை தண்ணீரில் நனைத்து கண்களில் வைத்து வைத்து எடுக்க வேண்டும். குறிப்பாக உயிரிழந்தவரின் கண்களை 4 முதல் 6 மணி நேரத்துக்குள் எடுத்துவிட வேண்டும். அதனால் 104-ஐ விரைவாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.