தமிழகம்

புதிய தமிழ் எழுத்துருக்களை கணினி பயன்பாட்டில் சேர்க்க எதிர்ப்பு: முன்வரைவை திரும்பப் பெறக் கோரி வழக்கு

செய்திப்பிரிவு

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 55 தமிழ் எழுத்துருக்களை அனும திக்கக் கோரி உலக எழுத்துரு கூட்டமைப்புக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பிய முன் வரைவை திரும்பப் பெறக் கோரிய மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மதுரை தபால்தந்தி நகரைச் சேர்ந்த எம்.ஆனந்தபாண்டியன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழ் மொழியைக் கணினி பயன்பாட்டில் எளிமைப்படுத்தும் வகையில், அண்ணா பல்கலைக் கழகம் ஏற்படுத்திய உயர்நிலைக் குழு 55 புதிய தமிழ் எழுத்துருக் களை உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய எழுத்துருக்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இந்த எழுத்துருக்களை அனு மதிக்க உலகளவிலான எழுத்துரு கூட்டமைப்பு ஒப்புதல் தெரிவித் துள்ளது.

தமிழ் எழுத்துருவில் மாற்றத்தை ஏற்படுத்தும் முன்பு தமிழ், கணக்கு, வரலாறு, தொல் லியல் நிபுணர்களிடம் கருத்து களைக் கேட்டிருக்க வேண்டும்.

இந்த மாற்றங்களை ஏற் படுத்த நிபுணர்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. தமிழ் செம்மொழி ஆகும். இதில் குறில், நெடில்ஆகியவற்றிடையே அதிக வேறுபாடுகள் உள்ளன. நாட்டில் 9 கோடி பேர் தமிழ் பேசுகின்றனர். தமிழ் எழுத்துருக்களின் உண்மை யான சிறப்பு, உயரிய பாரம்பரி யம் காப்பற்றப்பட வேண்டும். நிபுணர்களிடம் கருத்து கேட் காமல் புதிய எழுத்துருவை உருவாக்குவதால் தமிழ் மொழி பாதிக்கப்படும்.

பிற மொழி கலப்பு ஏற்படும். எனவே, தமிழ் புதிய எழுத்துருவுக்கு அனுமதி கோரி உலக எழுத்துரு கூட்டமைப்புக்கு, சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள (தமிழ் இணையக் கல்விக் கழகம்) இயக்குநர் அனுப்பிய திட்ட முன்வரைவை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எப்.தீபக் வாதிட்டார். விசாரணையை நீதிபதி ஜூன் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT