தமிழகம்

என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள கரிசூழ்ந்தமங்கலத்தை சேர்ந்தவர் கிட்டப்பா (35). இவர் மீது கொலை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. குறிப்பாக ஆழ்வார்குறிச்சியில் 2009-ல் நடைபெற்ற 3 பேர் கொலை வழக்கில் இவருக்கு தொடர்புள்ளது.

நேற்று இரவு சுத்தமல்லி அருகே கே.எம்.ஏ. நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கிட்டப்பா பதுங்கியிருப் பதாக தகவல் கிடைத்தது. சிறப்புப்படை சப்-இன்ஸ் பெக்டர் சிவராமன் உள்ளிட்ட போலீஸார் அவரைக் கைது செய்ய முயன்றனர். அப்போது, சிறப்புப்படை போலீஸாரை அரிவாளால் வெட்டி விட்டு கிட்டப்பா தப்பியோடினார். போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் கிட்டப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கிட்டப்பா அரி வாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவ ராமன் மற்றும் இரு போலீஸார் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் மற்றும் மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT