தமிழகம்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் - காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு கூட்டம்: திருவள்ளூரில் உறுதிமொழி ஏற்பு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில், குழந்தை தொழி லாளர் எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புதுறை செயலர் (பொறுப்பு) குமார் ஜெயந்த் பேசியதாவது:

குழந்தை தொழிலாளர்களை தமிழகத்தில் ஒழிப்பதற்கு, பெற்றோர் கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர்களிடம் மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க மக்கள் பிரதிநிதிகள் கிராம அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடந்து, குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு பள்ளியில் பயின்று சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 3 மாணவர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர் அகற்றுதல் தொடர்பான பணிகளில் சிறப்பாக செயல்பட்டதாக 5 அலுவலர்களுக்கும், சிறந்த கல்வி பயிற்றுநர்களுக்காக 12 ஆசிரியர் களுக்கும் தொழிலாளர் துறை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், மாணவ மாணவியருக்கு உயர் கல்வி உதவிதொகையாக 24 பேருக்கு தலா ரூ. 6 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் ஆணையர் அமுதா, எம்எல்ஏக்கள் சோமசுந்தரம், கணேசன், காஞ்சிபுரம் எம்பி. மரகதம் உள்ளிட்டோர் பங்கேற் றனர். பின்னர், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பான கையெழுத்து இயக்கத்தை, மாவட்ட ஆட்சியர் சண்முகம் தொடங்கி வைத்தார்.

உறுதியேற்பு

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு, நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அதிகாரிகள் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை ஏற்றனர்.

இதை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்து வாசிக்க, அதனை அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT