திருநெல்வேலியை அடுத்த சேரன்மகாதேவி அருகேயுள்ள உலகன்குளத்தைச் சேர்ந்தவர் பி.தினகரன் (35). கட்டிடத் தொழிலாளி. இவர் தனது மனைவி சாந்தா (27), மகன்கள் இரட்டையர்களான பிரைட்டஸ் (13), அகஸ்டஸ் (13), மகள் லோபிசா (10) ஆகியோருடன் ஒரு மொபட்டில் தென்காசிக்கு நேற்று சென்றுகொண்டிருந்தார்.
சேரன்மகாதேவி தனியார் பள்ளி அருகே சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த கார் அவர்களது மொபட்டில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தினகரனும், அவரது குடும்பத்தினரும் பலத்த காயமடைந்தனர். இதில் சம்பவ இடத்தில் சாந்தாவும், பிரைட் டஸும் உயிரிழந்தனர். மருத்து வமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தினகரனும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி லோபிசாவும் உயிரிழந்தனர். சேரன்மகாதேவி போலீஸார் விசாரிக்கிறார்கள்.
இதுபோல் சேரன்மகாதே வியிலிருந்து திருநெல்வேலியை நோக்கி நேற்று மாலையில் காரில் சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட மகளிரணி நிர்வாகி ஷீபா வந்து கொண்டிருந்தார். காரை ஓட்டுநர் தர்மராஜ் (45) என்பவர் ஓட்டினார். திருநெல்வேலி அருகே தருவையில் தனியார் பாலி டெக்னிக் கல்லூரி அருகே வந்தபோது எதிரே வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி தர்மராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஷீபா காயமடைந்தார்.