தமிழகம்

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் செலவினப் பார்வையாளராக ராகுல் ரமன் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் செலவினப் பார்வையாளராக ராகுல் ரமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

''சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு ஜூன் 27-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியின் செலவினப் பார்வையாளராக ராகுல் ரமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவப்படை வரவழைக்கப்படும். ஆர்.கே நகர் தொகுதியில் பறக்கும் படைகள் மூலம் வாகன சோதனை நடத்தப்படுகிறது'' என்று சந்தீப் சக்சேனா பேசினார்.

SCROLL FOR NEXT