தமிழகம்

வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டவர் சிக்கினார்: மேலும் 10 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை அருகே கார்கள், வீடு, ஹோட்டல், அரசியல் என குறுகிய காலத்தில் சொகுசு வாழ்க்கைக்கு மாறிய இளைஞர் வங்கியில் நகைகள் திருடுபோன வழக்கில் சிக்கியுள்ளார்.

கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள ஒரு வங்கியில் திருட முயன்ற போது அங்குள்ள அலாரம் ஒலித்ததும் திருடர்கள் தப்பிவிட்டனர். இதையடுத்து அங்குள்ள கண் காணிப்பு கேமராவின் பதிவு, விட்டுச்செல்லப்பட்ட ஆயுதங்கள் மற்றும் காரின் பதிவு எண் ஆகியவற் றைக் கொண்டு திண்டுக்கல் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ் ணனை(35) பிடித்து விசாரணை செய்ததில், திண்டுக்கல் வங்கி யில் திருட முயன்றதையும், குளத்தூர் வங்கியில் திருடியதையும் கோபால கிருஷ்ணன் உறுதி செய்துள்ளதாக போலீஸார் கூறுகின் றனர். திருடப்பட்ட நகைகள் விற் பனை செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து புதுக் கோட்டை, திருச்சி, கீரனூர் போன்ற பகுதிகளில் நகைகள் விற்கப்பட்ட கடைகளில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இவர் சென்னையில் லிப்ட்-க்கான உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த போது பயன்படுத்திய, பலமான இரும்புகளைத் துண்டிக்கும் ஆயு தங்களை திருட்டு சம்பவத்துக்குப் பயன்படுத்தியுள்ளார். இவருடன் திருட்டு தொழிலில் ஈடுபட்டதாக சுமார் 10 பேரைப் பிடித்து தனித்தனியாக வைத்து போலீஸார் விசாரிக்கின்றனர். இதுதவிர தமிழ்நாட்டில் பூட்டிய வீடுகள் மற்றும் கடைகளில் நடந்த திருட்டு சம்பவங்களில் இவருக்கு தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்கப்படுவதால் தினமும் விசாரணையின் எல்லை விரி வடைந்துகொண்டே செல்வதாக போலீஸில் கூறப்படுகிறது.

குறுகிய காலத்தில் சொந்த ஊரில் வீடு கட்டிய கோபாலகிருஷ்ணன், 4 கார்களை வாங்கி ஊருக்குள் வலம் வந்துள்ளார். கீரனூர் அருகே ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். அரசியல் கட்சி ஒன்றில் முக்கிய பதவியைப் பெறுவதற்கு அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேரம் பேசிவந்துள்ளார்.

SCROLL FOR NEXT