பொதட்டூர்பேட்டை அருகே சாலையோரத்தில் நின்றிருந்த டிராக்டர் மீது ஷேர் ஆட்டோ மோதியதில் 5 மாத குழந்தை, பாட்டி என இருவர் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை அருகே உள்ள மேல்நெடுங்கல் பகுதி யைச் சேர்ந்தவர் ரவி (45) கூலித்தொழிலாளி. இவரது மனைவி வள்ளியம்மாள்(40). இவர்களது மகள் லட்சுமிக்கு (25) கடந்த 5 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் தனது தாய் வீட்டில் அவர் தங்கியிருந்தார்.
நேற்று முன் தினம் இரவு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மேல்நெடுங் கல் பகுதியிலிருந்து, பொதட்டூர் பேட்டைக்கு ரவி, வள்ளியம்மாள், லட்சுமி ஆகியோர் குழந்தையுடன் ஷேர் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தனர்.
திருத்தணி- பொதட்டூர்பேட்டை சாலையில், செங்காளப்பள்ளி அருகே மழையின் காரணமாக சாலையோரத்தில் நின்றிருந்த டிராக்டர் மீது ஷேர் ஆட்டோ மோதியது.
இதில், பலத்த காயமடைந்த குழந்தையும், வள்ளியம்மாளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லேசான காயமடைந்த ரவியும், லட்சுமியும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதட் டூர்பேட்டை போலீஸார், விபத் துக்கு காரணமான டிராக்டர், ஆட்டோவை பறிமுதல் செய் துள்ளனர். ஷேர் ஆட்டோவின் ஓட்டுநரான மேல்நெடுங்கல் பகுதியைச் சேர்ந்த சூர்யாவை தேடி வருகின்றனர்.