தமிழகம்

பாக்ஸ்கான் தொழிற்சாலையை மூட அனுமதிக்கக் கூடாது: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை அருகே இருங்காட்டுக் கோட்டையில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையை மூடுவதற்கான அனுமதியை தமிழக அரசு அளிக் கக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தர விட்டது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலூர் மாவட்டம் இலத்தேரியைச் சேர்ந்த உதயகுமார், சதீஷ்குமார், ஜெயக் குமார், பிரகாஷ், பாஸ்கரன் ஆகியோர் தாக்கல் செய்த மனு விவரம்:

காஞ்சிபுரம் மாவட்டம், இருங் காட்டுக்கோட்டை சிறப்பு பொருளா தார மண்டலத்தில் பாக்ஸ்கான் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், செல்போன் உதிரிபாகங்கள் உள் ளிட்ட பல்வேறு டிஜிட்டல் பொருட் களை தயாரிக்கும் இங்கு, 3 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.

தேவையில்லாமல் இந்த தொழிற்சாலையின் பெயரை மாற்றியதுடன், திடீரென தொழிற் சாலையை மூடிவிட்டதாகக் கூறி எங்களது வாழ்வாதார உரிமை களை மறுக்கின்றனர்.

தொழிற்சாலைகள் தாவா சட்டத் தைப் பின்பற்றாமல் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொழிற்சாலையை மூடிவிட்டனர். இதையடுத்து தொழி லாளர் நலத்துறை துணை ஆணை யர், உதவி ஆணையர் ஆகியோர் நடத்திய சமரசப் பேச்சுகள் தோல்வியில் முடிந்தன.

இழப்பீடு பெற்றுச் செல்லும்படி பிப்ரவரி 27-ம் தேதி நோட்டீஸ் அனுப்பினார்கள். 28-ம் தேதி எங் களை வேலையைவிட்டு அனுப்பி உத்தரவிடப்பட்டது.

எங்களுக்கு இழப்பீடு தேவை யில்லை. வேலைதான் வேண்டும். அனைத்து தொழில் உபகரணங் களையும் வேறு இடத்துக்கு எடுத் துச் செல்ல வசதியாக தொழிற் சாலையை மூடுவதற்கான அனுமதியை தமிழக தொழிலாளர் நலத்துறையிடம் பாக்ஸ்கான் கோரி யுள்ளது. தொழிற்சாலையை மூடு வதற்கோ, அங்கிருந்து எந்த உபகரணத்தையும் எடுத்துச் செல்லவோ பாக்ஸ்கான் நிர்வாகத் துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரித்து, பாக்ஸ்கான் தொழிற்சாலை விவகாரத்தில் தற்போதைய நிலையே ஒருவாரம் நீடிக்க வேண்டும் என்று உத்தர விட்டு, விசாரணையை 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

          
SCROLL FOR NEXT