தமிழகம்

ரூ.111.23 கோடியில் ஆட்சியர் அலுவலக கட்டிடங்கள்; 9 புதிய வருவாய் வட்டங்கள்: காணொலி காட்சி மூலம் ஜெயலலிதா திறந்துவைத்தார்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ரூ.111.23 கோடி யில் கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடங்கள் மற்றும் நீலகிரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட 9 வருவாய் வட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

தஞ்சையில் 2,07,000 சதுரடி பரப்பில் ரூ.30 கோடியே 46 லட் சத்து 57 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். மேலும், கடலூரில் ரூ.24 கோடியே 41லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம், தாம்பரத்தில் ரூ. 1.10 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தூத்துக்குடியில் ரூ.42.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வரு வாய் கோட்டாட்சியர் குடியிருப்பு, ரங்கத்தில் ரூ.2.15 கோடியில் கட்டப்பட்ட வருவாய் கோட் டாட்சியர் அலுவலக கட்டிடம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்துவைத்தார்.

திருப்போரூர், உடையார் பாளையம், குறிஞ்சிப்பாடி, பழனி, மதுராந்தகம், கடவூர், திரு மங்கலம், குத்தாலம், கொல்லி மலை, ஓமலூர், சிவகங்கை, திருபுவனம், திருவிடை மருதுார், காங்கேயம், ஆலத்தூர் ஆகிய இடங்களில் ரூ.31 கோடியே 73 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 15 வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள், அந்தியூர் மற்றும் சின்னசேலம் ஆகிய இடங்களில் ரூ.4 கோடியே 25 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் குடி யிருப்புகளையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

பெரம்பலூர் - வெண்கலம், மதுரை- ராஜாகூர், குலமங்கலம், அவனியாபுரம்,தனிச்சியம், கரூர்- குளித்தலை ஆகிய இடங்களில் ரூ.92.20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 7 குடியிருப்புகளுடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடங்கள்; நீலகிரி, விருதுநகர், மதுரை, ஈரோடு, திருவள்ளூர், சேலம், கரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ரூ. 4 கோடியே 60 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 65 கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட் டிடங்கள் மற்றும் குடியிருப்புகளை யும் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டிடம்; தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்துறையின் குறுவட்ட அளவர்களுக்கு ரூ.10 கோடியே 16 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 80 குடியிருப்புகளுடன் கூடிய அலுவலக கட்டிடங்கள் என மொத்தம் ரூ.111 கோடியே 23 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

புதிய வட்டங்கள் தொடக்கம்

நீலகிரி- உதகையில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சிவகங்கை- காளை யார்கோவில்; திருவண்ணாமலை- வெம்பாக்கம், சேத்துப்பட்டு; சேலம்- பெத்தநாயக்கன் பாளை யம்;கடலுார்- புவனகிரி, காஞ்சிபுரம்- வாலாஜாபாத்; விழுப் புரம்- மரக்காணம்; நெல்லை-கடையநல்லுார்; நாமக்கல்- சேந்தமங்கலம் ஆகிய இடங்களில் தோற்றுவிக்கப்பட்ட 9 புதிய வருவாய் வட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலர் இரா.வெங்கடேசன், வருவாய் நிர்வாக ஆணையர் தி.ஸ்ரீ.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT