தமிழகம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சோலார் வாட்டர் ஹீட்டர் : தருமபுரி மாவட்டத்தில் அறிமுகம்

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் சோலார் வாட்டர் ஹீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் 24 மணி நேரமும் தடையின்றி வெந்நீர் கிடைப்பதால் நோயாளிகள் பயனடைகின்றனர்.

பிரசவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை கிராமப் பகுதிகளில் கணிசமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இருப் பினும், அங்கே உள்நோயாளிகளாக வருவோருக்கு பல்வேறு தேவை களுக்காக வெந்நீர் தேவையாக இருந்தது. ஆனால் அதற்கான வசதிகள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தருமபுரி மாவட் டத்தின் பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் சோலார் வாட்டர் ஹீட்டர்கள் பொருத்தப் பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத் தம் 48 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அவற்றில் 15 ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார நிலையங்களாக இருந்து சமீபத்தில் தரம் உயர்த் தப்பட்டவை. மீதமுள்ள 33 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சமீபத் தில் சோலார் வாட்டர் ஹீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுவரை வெந்நீர் தயாரிப்புக்கான கட்ட மைப்புகள் இல்லாததால் மருத் துவமனை பணியாளர்கள் தாற் காலிக மாற்று ஏற்பாடுகள் மூலம் வெந்நீர் தயாரிக்கும் நிலைக்கு ஆளாகி வந்தனர். சிலநேரங்களில் குளிர்ந்த நீரையே பயன்படுத்தும் சிரமமும் நிலவி வந்தது. தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் அதிகம் நடக்கும் மாவட்டமாக தருமபுரி உள்ள நிலையில் இதுபோன்ற வசதியின்மையால் தாய்மார்கள் அவதிப்பட்டு வந்தனர்.

தற்போது நிறுவப்பட்டுள்ள சோலார் வாட்டர் ஹீட்டர்கள் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. பிரசவத் துக்கு வரும் பெண்கள், குடும்பக் கட்டுப்பாடு அறுவை செய்துகொள் ளும் பெண்கள் உள்ளிட்ட உள் நோயாளிகளுக்குத் தேவையான வெந்நீர் இந்த வாட்டர் ஹீட்டர்கள் மூலம் கிடைக்கிறது. இந்தத் திட்டம் கிராமப்புற நோயாளிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் சகாயமேரி ரீட்டாவிடம் பேசியபோது, ‘33 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சோலார் வாட்டர் ஹீட்டர்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மொத் தம் ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் இந்த வாட்டர் ஹீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான நிதி மாவட்டத் திட்டக் குழு மூலம் வழங்கப்பட்டுள்ளது. பிரசவித்த தாய்மார்கள், பச்சிளங் குழந்தை கள் குளிக்கவும், இதர தேவை களுக்கும் தடையின்றி 24 மணி நேரமும் தற்போது வெந்நீர் கிடைத்து வருகிறது.

மேலும், இயற்கை ஆற்றலை பயன்படுத்து வதால் மின்சார பயன்பாடு மற்றும் தேவையற்ற செலவும் தவிர்க்கப்படுகிறது. மீதமுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக் கும் இரண்டாம் கட்டமாக இந்த வாட்டர் ஹீட்டர்கள் விரைவில் பொருத்தப்படும்’ என்றார்.

SCROLL FOR NEXT