தமிழகம்

காஞ்சிபுரம் நல்லாத்தூர் ஊராட்சியில் உயர் நீதிமன்ற தடை ஆணையை மீறி ஏழைகளின் குடியிருப்புகள் இடிப்பு: கிராம மக்கள் சாலை மறியலால் பதற்றம்

கோ.கார்த்திக்

நல்லாத்தூர் ஊராட்சி, பொந்தகாரி கிராமத்தில் ஆற்றுக் கால்வாய் கரையோரத்தில் வசித்து வரும் குடியிருப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் தடை ஆணை பிறப் பித்திருந்தது. இந்நிலையில் பொதுப்பணித் துறையின் கீழ்வடி நில பாலாறு அதிகாரிகள் கரை யோர குடியிருப்புகளை அகற்றிய தால், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருக்கழுக்குன்றம் ஒன்றியத் துக்குட்பட்ட பொந்தகாரி கிராமத் தில் அமைந்துள்ள கால்வாயை ஒட்டி, பணங்காட்டுச்சேரி, பொம்ம ராஜபுரம், நல்லாத்தூர், ஆயப் பாக்கம் மற்றும் வாயலூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமப் பகுதி மக்கள், பாலாற்றில் தண்ணீர் செல்லாததால், கால்வாய் கரையை ஆக்கிரமித்து குடியிருப்புகள் அமைத்து, கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் ரங்கநாதன் என்பவர், ஆக்கிரமிப்பு வீடுகளினால், தனது பட்டா நிலத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள் ளதாக கூறி, ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம், ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுமாறு, பொதுப்பணித் துறையின் கீழ்வடிநில கோட்ட பாலாறு பொறியாளருக்கு உத்தர விட்டது.

இதையடுத்து, திருக்கழுக் குன்றம் உதவிப் பொறியாளர் அம்பலவாணன், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை 21 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என கடந்த மாதம் 25-ம் தேதி நோட்டீஸ் வழங்கினார். இதை எதிர்த்து, கிராம மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் அக்னி ஹோத்ரி மற்றும் வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர்.

நீதிபதிகள் அளித்த உத்தரவில் ‘ஆற்றங்கரையோர பகுதிகளில் நீண்டகாலமாக வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்த பிறகே ஆக்கிர மிப்புகளை அகற்றும் நடவடிக் கையில் ஈடுபட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் திருக்கழுக்குன்றம் உதவி செயற்பொறியாளர் அம்பல வாணன், பொறியாளர் ராதா ஆகியோர் தலைமையிலான பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து கிராம மக்களின் வழக்கறி ஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத் தில் நீதிபதிகளிடம் முறையிட்டனர். இதை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணிகளை நிறுத்துமாறு பொதுப்பணித் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பொதுப்பணித் துறையினர் குடியிருப்புகளை அகற் றும் பணிகளை நிறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, நல்லாத்தூர் கிராம மக்கள் கூறியதாவது: மாற்று இடம் ஒதுக்கப்படும் வரை ஆக்கிரமிப்பு களை அகற்றக்கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவின் நகல்களை சம்பந் தப்பட்ட அதிகாரிகளிடம் நாங்களே ஒப்படைத்தோம்.

ஆனால், உயர் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தர விட்டுள்ளதாகக் கூறி, வீடுகளை இடிக்க தொடங்கினர். சுற்றுச்சுவர் களையும் இடித்து விட்டனர். இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT