தமிழகம்

ஐஐடி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: ஸ்மிருதி இரானி உருவப்படம் எரிப்பு

செய்திப்பிரிவு

அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டத்தை தடை செய்த ஐஐடி நிர்வாகத்தைக் கண்டித்து சென்னை யில் மாணவர் அமைப்புகள் ஆர்ப் பாட்டம் நடத்தின. அப்போது மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உருவப்படம் எரிக்கப்பட்டது.

மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்ததாக கூறி, சென்னை ஐஐடியில் இயங்கி வந்த அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. ஐஐடி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அகில இந்திய மாணவர் பெருமன்றம், அகில இந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உருவப்படம் எரிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலச் செய லாளர் தினேஷ் கூறும்போது, ‘‘பெருமாள் முருகன் விவகாரம், தனியார் தொலைக்காட்சி மீது தாக்குதல் என கருத்து சுதந் திரத்துக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடக்கின்றன. மனித ஆற்றல் துறைக்கு யாரோ கடிதம் எழுதியதாகவும், அதன்பேரில் நட வடிக்கை எடுத்ததாகவும் கூறுவதை நம்ப முடியாது. வாசிப்பு வட்டத்தின் மீதான தடையை நீக்க வேண்டும்’’ என்றார்.

அகில இந்திய இளைஞர் பெரு மன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT