மா விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கிருஷ்ணகிரியில் அகில இந்திய அளவில் மாங்கனி கண்காட்சி கடந்த 22 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 23-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தொடங்கி வைத்தார்.
கண்காட்சி நுழைவு வாயில் முழுவதும் மாங்கனிகளால் அலங்காரம் செய்யப் பட்டிருந்தது. தோட்டக்கலைத்துறை சார்பில் மா அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைவிக்கப்பட்ட மாங்கனிகளை மக்கள் பார்வைக் காக வைத்திருந்தனர்.
கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசா யிகள், 27 மா வகைகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
இதேபோல், கன்னியாகுமரி, நீலகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களிலிருந்து 256 விவசாயிகள் தாங்கள் விளைவித்த 576 மா வகைகளை காட்சிக்காக வைத்துள்ளனர்.
மேலும், மாங்காய், மாம்பழங் களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களும் பார் வைக்கு வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியில் வேளாண்மை, செய்தித்துறை, கலை பண்பாட்டுத் துறை, சுகாதாரம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து துறை களின் சார்பில் அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன. இந்த கண்காட்சி தொடர்ந்து 21 நாட்களுக்கு நடை பெறும்.
முதல்முறையாக துப்பாக்கிகள்
கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியில் முதல்முறையாக காவல்துறை சார்பில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. ஏகே47, கார்பன், எஸ்எல்ஆர் உள்ளிட்ட 15 வகையான துப்பாக்கிகள், ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. துப்பாக்கிகளை எவ்வாறு பயன் படுத்துவது, எந்த சூழ்நிலையில் எந்த துப்பாக்கி பயன்படும் என்பது குறித்து டிஎஸ்பி சந்தானபாண்டியன், ஆய் வாளர் தங்கவேல் ஆகியோர் மக்களுக்கு விளக்கினர்.