சென்னை அண்ணா சாலை யில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் எஸ்கலேட்டரில் சிக்கி இரண்டரை வயது குழந்தையின் கை விரல்கள் துண்டாயின.
பெங்களூருவை சேர்ந்த தம்பதி சந்தோஷ்குமார் - சவுமியா. இவர்களது இரண்டரை வயது குழந்தை கிரிஷ். அவர்கள் கடந்த 5 நாட் களுக்கு முன்பு சென்னை வந்தனர். இங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த வர்கள் அண்ணா சாலையில் உள்ள பிரபலமான வணிக வளாகத்துக்கு நேற்று காலை சென்றனர்.
மதியம் 2 மணி அளவில் வளாகத்தின் 2-வது தளத் தில் இருந்து கீழே இறங்கத் தயாராயினர். குழந்தை கிரிஷை முன்னால் நடக்க விட்டு, அவர்கள் இருவரும் பின்னால் வந்தனர். எஸ்க லேட்டரில் கால் வைத்த குழந்தை எதிர்பாராதவித மாக தடுமாறி கீழே விழுந் தது. எஸ்கலேட்டர் இடை வெளியில் குழந்தையின் வலது கை விரல்கள் சிக்கிக்கொண்டன. இதில், 3 விரல்கள் நசுங்கி துண்டாயின. ரத்தம் கொட்டியது.
அலறித் துடித்த குழந்தையை அருகே உள்ள ராயப்பேட்டை அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு போதிய வசதிகள் இல்லாததால் அங் கிருந்து ஸ்டான்லி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரி சோதனை செய்த மருத்துவர் கள் நேரம் கடந்துவிட்டதால் விரல்களை இணைக்க வாய்ப் பில்லை என்று கூறிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.