மதுரவாயலில் குடும்பத் தகராறில் 2 குழந்தைகளைக் கொன்ற தந்தையை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. காலனி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் ரவி(40). இவரது மனைவி மகேஷ்வரி. இருவரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக உள்ளனர். இவர்களுக்கு பிரியதர்ஷினி (14), பிரபு (12) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீட்டருகே உள்ள தனியார் பள்ளியில் பிரியதர்ஷினி 7 ம் வகுப்பிலும், பிரபு 6 ம் வகுப்பிலும் படித்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக ரவியும், மகேஷ்வரியும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். குழந்தைகள் ரவியிடமும், மகேஷ்வரியிடமும் மாறிமாறி வசித்தனர். கடந்த ஓராண்டாக குழந்தைகள் ரவியிடமே இருந்து வந்தனர்.
மனநிலை பாதிக்கப்பட்டவரைப் போல் நடந்து கொண்ட ரவி, குழந்தைகளை வீட்டி லிருந்து வெளியே அனுப்புவதே இல்லை என்று அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, ரவி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றதை பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்துள்ளனர். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இந்நிலையில் ரவியின் வீட்டுக்குள் இருந்து நேற்று பயங்கர துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகே வசிப்பவர்கள் மதுர வாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் ரவியின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் பிரியதர் ஷினியும், பிரபுவும் இறந்து கிடந்தனர். அவர்கள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். கொலை செய்ய பயன்படுத்திய கத்தியும் அருகிலேயே கிடந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார் இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீஸார் கூறும்போது, “இரு குழந்தைகளையும் ரவிதான் கொலை செய்திருக்கிறார். அவரது செல்போன் எண் ணுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தலைமறைவாக இருக்கும் ரவியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இரு குழந்தைக ளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. உடல்கள் அழுகியதால் தலை தனியாக வந்திருக்கலாம். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே இது குறித்த தகவல் தெரியவரும்” என்றனர்.