ரமலான் நோன்பு இன்று அதிகாலை தொடங்குவதாக அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்வது வழக்கம். ரமலான் மாதமானது பிறை தெரிந்ததை அடுத்து தொடங்குகிறது.
இதையடுத்தே நோன்பும் மேற் கொள்ளப்படும்.
இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு தொடக்கம் குறித்து அரசு தலைமை ஹாஜி கூறியதாவது:
இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு நாளை (இன்று) அதிகாலை தொடங்குகிறது. அடுத்த 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நீடிக்கும்.
இவ்வாறு அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் தெரிவித்தார்.