‘இடைத்தேர்தல்களில் எங் களுக்கு நம்பிக்கை இல்லை. வரும் 2016 சட்டப்பேரவை தேர் தல்தான் தமாகாவின் இலக்கு’ என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமாகாவில் சென்னை மாநகரம் 8 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். 8 மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் அடையாறில் முத்தமிழ் பேரவை மண்டபத்தில் ஜி.கே.வாசன் நேற்று ஆலோ சனை நடத்தினார். இதில், துணைத் தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், விடியல் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே 45 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்து சாதனை படைத்துள்ளோம். தற்போது மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் 20-ம் தேதிக்குள் அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகி கள் நியமிக்கப்படுவர். எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில் அனைத்து பொறுப்புகளிலும் 60 சதவீதம் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறேன். காம ராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி தஞ்சாவூரில் பொதுக் கூட்டம் நடைபெறும். கட்சி வளர்ச்சிப் பணியில் கவனம் செலுத்தினாலும் கடந்த 8 மாதங் களில் காவிரி விவகாரம், மாண வர் பிரச்சினை, மதுவிலக்கு உள் ளிட்ட பல்வேறு பிரச்சினை களுக்காக போராட்டம் நடத்தியுள்ளோம்.
வரும் 2016 சட்டப் பேரவைத் தேர்தல்தான் எங் களின் இலக்கு. அதற்கு எங் களை தயார்படுத்தி வருகிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.
அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புகின்றனர். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்து முடிவு செய்வோம்.
இலங்கை அரசு கைப்பற்றி யுள்ள 33 படகுகளையும். கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை யும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். யோகா என்பது உடலுக்கும், மனதுக்கும் சிறந்த பயிற்சி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், வறுமையைப் போக்கவும் வேலைவாய்ப்பை உருவாக்கவும் முக்கியத்துவம் கொடுக்காமல் யோகாவை முன்னிலைப்படுத்துவதால் எந்தப் பலனும் இல்லை.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.