தஞ்சை மாவட்டம் கும்பகோணத் தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் கடந்த 2004 ஜூலை 16-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர்.
உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கான நஷ்டஈட்டுத் தொகையை நிர்ணயித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. உடல்நலக் குறைவு காரணமாக அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, இந்த ஆணையத்தின் பொறுப்பு, புதுச்சேரி மாநில நுகர்வோர் குறைதீர்வு அமைப்பின் தலைவர் நீதிபதி கே.வெங்கட்ராமனிடம் 2014 செப்டம்பர் 16-ம் தேதி கூடுதல் பணியாக வழங்கப்பட்டது.
விசாரணையை முடிக்க அவகா சம் கேட்டு அவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணை ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்டது.