தமிழகம்

வல்லூர் அனல் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தேசிய அனல் மின் கழகம் சார்பில் 3 அலகுகள் கொண்ட அனல் மின் நிலையம் இயங்குகிறது. இதில், 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக கடந்த 22-ம் தேதி முதல், 2- வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை 3- வது அலகில், நிலக்கரி கையாளும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் 3- வது அலகிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், தற்போது, வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அனல்மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT