ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் மாணவ-மாணவியர் விடுதி களில் சேருவதற்கு விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் விண் ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத் தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கட்டுப்பாட்டின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவ- மாணவியர் விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்த விடுதிகளில், 2015-2016 கல்வியாண்டுக்கான மாணவ-மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ- மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
பெற்றோரின் ஆண்டு வரு மானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும் மாணவர்கள் வசிக்கும் இடத்துக் கும் குறைந்தபட்சம் 5 கி.மீ., தூரம் இருக்க வேண்டும். இந்த விதி மாணவியருக்குப் பொருந்தாது.
பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவியர்கள் சேரலாம். அரசு கல்லூரி விடுதிகளில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ- மாணவியர் கள் சேரலாம். இதுதவிர, ஒரு விடுதிக்கு தலா 5 நபர்கள் வீதம் அனைத்து விடுதிகளிலும் இலங்கை தமிழர் களின் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
அரசு பள்ளி விடுதிகளில் சேர விரும்புவோர், வரும் 30-ம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதி களில் சேர விரும்புவோர் ஜூலை 20-ம் தேதிக்குள்ளும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் களிடம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரி வித்துள்ளது.