தமிழகம்

திருச்சி தேசிய சட்டப் பள்ளி துணைவேந்தர் ராஜினாமா: புதிய பதிவாளர் நியமனம் காரணமா?

செய்திப்பிரிவு

திருச்சியில் உள்ள தேசிய சட்டப் பள்ளி துணைவேந்தராக பணியாற் றிய என்.முருகவேல் ராஜினாமா செய்துள்ளார். புதிய பதிவாளராக ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் வி.அருண்ராய் நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் முதன்முறையாக ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதியில் 25 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் தேசிய சட்டப் பள்ளி 2013-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். தேசிய சட்டப் பள்ளியின் துணைவேந்தராக என்.முருகவேல், பதிவாளராக எம்.எஸ்.சவுந்திரபாண்டியன் மற்றும் 3 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

கடந்த இரு ஆண்டுகளாக சட்டப் பள்ளி சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற சட்டப் பள்ளியின் செயல்பாட்டுக் குழுக் கூட்டத்தில் துணைவேந்தர் முருகவேல் தனது ராஜினாமா கடிதத்தை தயார் செய்து, அதை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

இதையடுத்து பூம்புகார் கப்பல் நிறுவன நிர்வாக இயக்குநராக வும், நிதித் துறை இணைச் செய லாளராகவும் பணிபுரிந்து வந்த வி.அருண்ராயை தேசிய சட்டப் பள்ளியின் பதிவாளராக நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அருண்ராய் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக 2011-12-ல் பணியாற்றியவர்.

ராஜினாமா பின்னணி?

துணைவேந்தர் ராஜினாமா பின்னணி குறித்து விசாரித்த போது, சட்டப் பள்ளியைப் பொறுத்தவரை துணைவேந்தரே தலைமை அதிகாரி. தலைமைப் பொறுப்பில் உள்ள துணைவேந் தரின் கீழ்தான் பதிவாளர் பணி யாற்ற வேண்டும். இந்நிலையில் பதிவாளராக ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படும்போது, அவர் துணைவேந்தரின் கீழ் பணி செய்தாக வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படும் என்பதால் அரசின் நெருக்கடி காரணமாக முருகவேல் தனது பதவியை ராஜினாமா செய் திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முன்னாள் துணை வேந்தர் என்.முருகவேலிடம் கேட்டபோது, “செயல்பாட்டுக் குழுவில் உள்ளவர்கள் தனக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்காததால் ராஜினாமா செய்துள்ளேன்” என்றார்.

SCROLL FOR NEXT