சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத் தில் இருந்து ஒரு கிலோ தங்கக் கட்டிகள் கைப்பற் றப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலைய த்துக்கு நேற்று காலை 6 மணிக்கு ஒரு விமானம் வந்தது. பயணிகள் அனை வரும் இறங்கிச் சென்ற பிறகு, விமானத்தை சுத்தப் படுத்தும் பணியில் ஊழி யர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு இருக்கையின் கீழ் ஒரு பை இருந்தது. இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். பாது காப்பு அதிகாரிகள் மற் றும் வெடிகுண்டு நிபுணர் கள் விரைந்து வந்தனர். அந்த பையில் இருப்பது வெடிகுண்டாக இருக்குமோ என்று சோதனை நடத்தப் பட்டது.
தீவிர விசாரணை
இந்த சோதனையில் பைக் குள் 1 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது. அந்த தங்கக்கட்டிகள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டது. சிங்கப்பூரில் இருந்து தங்கக்கட்டிகளை கொண்டு வந்த நபர் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.