மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் தோன்றிய நடிகர் அமிதாப், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோருக்கு மதுரை நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மணவாளன் மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பது:
மதுரையில் உள்ள கடை ஒன்றில் மேகி நூடுல்ஸ் வாங்கினேன். அங்கிருந்த சிலர் எம்எஸ்ஜி என்ற ரசாயனமும், ஈயமும் அதிக அளவில் கலந்திருப்பதாக தெரிவித்தனர். இதனால் ஞாபக மறதி, கை நடுக்கம், நரம்புத் தளர்ச்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஈயம் எலும்பு வளர்ச்சியைப் பாதிக்கும்.
எனவே உடனே மேகி விற்ப னையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார பணிகளுக்கான துணை இயக்குநர், உணவு பாதுகாப்பு கமிஷனர் ஆகியோருக்கு மனு அனுப்பினேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நுகர்வோர் ஆணையம் தலையிட்டு விளம்பரங்கள் மூலம் விற்பனையை அதிகரிக்கும் வகையில் சினிமா நட்சத்திரங்கள் ஈடுபடக்கூடாது எனவும், விற்பனையை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்யவும் உத்தரவிட வேண்டும். நுகர்வோர் நல நிதியில் நூடுல்ஸ் நிறுவனத்தினர் ரூ.45 லட்சம் டெபாசிட் செய்யவும் உத்தரவிட வேண்டும் என தெரி விக்கப்பட்டிருந்தது. இந்த மனு மாநில நுகர்வோர் ஆணைய நீதித்துறை உறுப்பினர் ஜெய ராம், உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன் நேற்று விசார ணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிறவிப்பெருமாள், ‘முதல் கட்ட மாக மதுரை மாவட்ட கடைகளில் உள்ள நூடுல்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ய வேண்டும்’ என்றார்.
இதையடுத்து மனு குறித்து மேகி நூடுல்ஸ் நிறுவனம், சுகாதார பணிகளுக்கான துணை இயக்குநர், உணவு பாதுகாப்பு கமிஷனர், நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் ஜூலை 6-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட் டீஸ் அனுப்பவும், சுகாதாரத் துறை துணை இயக்குநர் நூடுல்ஸ் மாதிரிகளை ஆய்வு செய்து ஜூன் 18-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் வேண்டுமென நுகர்வோர் ஆணைய உறுப்பினர்கள் உத்தரவிட்டுள்ளனர்.