தமிழகம்

நடிகர் விதார்த் திருமணம் திருப்பதியில் நடந்தது

செய்திப்பிரிவு

நடிகர் விதார்த் காயத்ரி தேவி திருமணம் திருப்பதியில் நேற்று நடந்தது.

‘மின்னலே’, ‘சண்டைக்கோழி’, ‘குருவி’ போன்ற படங்களில் துணை நடிகராக நடித்தவர் விதார்த். பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து ‘முதல்இடம்’, ‘கொள்ளைக்காரன்’, ‘காடு’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார்.

இந்நிலையில், விதார்த் துக்கும் காயத்ரி தேவிக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திரு மணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருப்பதியில் திருமணம் நடை பெற்றது.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் வரும் 17-ம் தேதி நடக்கிறது.

SCROLL FOR NEXT