தமிழகம்

கோடை விடுமுறையில் பிர்லா கோளரங்கத்துக்கு 40 ஆயிரம் பேர் வருகை

செய்திப்பிரிவு

சென்னை கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் தமிழ்நாடு பெரியார் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா உள்ளது. இங்கு ஆற்றல் பூங்கா, அறிவியல் பூங்கா, உயிரியல் பூங்காக்கள் தவிர பிர்லா பிளானட்டோரியம், 3டி தியேட்டர், அறிவியல் மையம், லேசர் கண்காட்சி மையம், குழந்தைகள் விளையாட அறிவியல் சார்ந்த விளையாட்டு திடல் ஆகியவை உள்ளன. இந்த தொழில்நுட்ப பூங்காவுக்கு கடந்த கோடை விடுமுறையில் 40 ஆயிரம் பேர் வந்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் அய்யம்பெருமாள் கூறும்போது, “கோடை விடுமுறையில் அடிப்படை வானவியல், புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு பயிற்சியும், விளக்கமும் அளித்தோம். இது பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் 40 ஆயிரம் பேர் பிர்லா கோளரங்கத்துக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதத்தில் 37 ஆயிரம் பேர் வந்தனர்” என்றார்.

SCROLL FOR NEXT