தமிழகம்

வரி ஏய்ப்புக்காக நடத்தப்பட்ட போலி கிரானைட் நிறுவனங்கள்: சகாயம் குழுவினர் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

வரி ஏய்ப்புக்காக போலியான பெயர்களில் கிரானைட் கற்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டதை வணிகவரி அதிகாரிகள் நேற்று தாக்கல் செய்த 2,500 பக்க அறிக்கை மூலம் சகாயம் குழு உறுதி செய்தது.

மதுரை மாவட்டத்தில் நடை பெற்றுள்ள கிரானைட் முறைகேடு குறித்து சட்ட ஆணையர்சகாயம் விசாரித்து வருகிறார். மதுரை மாவட்டத்தில் கிரானைட் கற்களை விற்பனை செய்த பலரும் போலியான பெயர்களில் திண்டுக்கல் மாவட்டத்திலும் செயல்பட்டதற்கான ஆதாரம் சகாயம் குழுவுக்கு கிடைத்தது. இது குறித்து அறிக்கை தரும்படி திண்டுக்கல் வணிகவரி அலுவலகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

திண்டுக்கல் வணிகவரி அலுவலர் ஜெய்சங்கர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று சகாயத்திடம் 2 ஆயிரத்து 500 பக்கங்கள் அடங்கிய 15 புத்தகங்களை வழங்கினர். போலியான பெயர்களில் பதிவு செய்யப்பட்ட 15 நிறுவனங்கள் தொடர்பான இந்த ஆவணங்கள் குறித்து வணிகவரி அலுவலர்களிடம் சகாயம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து சகாயம் குழுவினர் கூறியது: வணிகவரி அலுவலர்கள் 15 நிறுவனங்களின் செயல்பாடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தபோது அவை போலியானவை எனத் தெரிந்துள் ளது. இதே நிறுவனங்களின் பெயர்களில் மதுரை மாவட்டத்திலும் கிரானைட் விற்பனை நடந்துள்ளது.

2 மாவட்டங்களிலும் அளிக்கப்பட்ட முகவரிகள் அனைத்தும் போலி யானது என்பது விசாரணையில் தெரிந்துள்ளது. இதன் பின்னணியில் பெரிய அளவில் கிரானைட் குவாரி நடத்தியவர்களே குவாரி யிலிருந்து கற்களை வெளியே எடுத்துச் செல்லும்போது 2.25% வரி செலுத்த வேண்டும். இந்த கற்களை வெளியில் விற்பனை செய்யும்போது தனியாக வருமானவரி செலுத்த வேண்டும்.

பல கோடி ரூபாய் விற்ப னையை போலி நிறுவனங்கள் பெயர்களில் மதிப்பை குறைத்து கணக்கு காட்டுவதால் வணிக வரி, வருமான வரி செலுத்தாமல் ஏமாற்ற முடியும். கிரானைட் கற்களின் விற்பனை அளவையும் மறைக்கலாம். இதன் மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது.

வரி வசூலிக்கும் போது நிறுவனங்களின் அமை விடம், செயல்பாடு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், இப்படி எதுவும் நடக்கவில்லை என்பது போலி நிறுவனங்கள் பெயரில் வரி வசூலிக்கப்பட்டதில் இருந்தே தெரிகிறது. இதுபோன்று வேறு எந்தெந்த வழிகளில் ஏய்ப்பு நடைபெற்றுள்ளது என விசாரணை நடக்கிறது என்றனர்.

SCROLL FOR NEXT