ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட சமூக ஆர்வலர் சசி பெருமாள், ஆர்.சி.பால்கனகராஜ் உட்பட 7 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 23 மனுக்கள் பெறப் பட்டுள்ளன.
முதல் நாளில் டிராஃபிக் ராமசாமி, பத்மராஜன் உள்ளிட்ட 6 பேர் மனுத் தாக்கல் செய்தனர். 2-ம் நாள் யாரும் மனுத் தாக்கல் செய்ய வில்லை. 3-ம் நாளான நேற்று முன் தினம் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, மாற்று வேட்பாள ராக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உட்பட 10 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், மது ஒழிப்பை வலியுறுத்தி தொடர் போராட்டங் கள் நடத்திவரும் எஸ்.கே.சசி பெருமாள், தமிழ்மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் யு.கே.மணிமாறன், தமிழ் மாநிலக் கட்சி சார்பில் ஆர்.சி.பால் கனகராஜ், சுயேச்சை வேட்பாளர்களாக பி.இசக்கிமுத்து, டி.எஸ்.தனஞ் செயன், ஜெ.ஜெயக்குமார், எம்.சுபாஷ்பாபு என 7 பேர் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.
மனுத்தாக்கல் முடித்து வெளி யில் வந்த சசிபெருமாள் கூறும் போது, ‘‘மது ஒழிப்பை வலியுறுத் தும் நோக்கத்தில்தான் நானும் டிராஃபிக் ராமசாமியும் போட்டியிடு கிறோம். அவரது மனு ஏற்கப்பட்டால் நான் விலகி விடுவேன். அவரது மனு நிராகரிக்கப்பட்டால், அவரது ஆதரவோடு நான் போட்டியிடுவேன்’’ என்றார்.