இந்தியாவுக்கு வருகைதரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் திருப்பதி சட்டக்கல்லூரி மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பங் கேற்க, இந்தியாவுக்கு வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக் சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக அரசியல் கட்சி கள் மற்றும் தமிழ் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின் றன. இந்நிலையில், ஜோலார் பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஜோலார்பேட்டை விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.25 மணியளவில் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்தது.
அப்போது, ஆந்திரம் மாநிலத் தில் உள்ள திருப்பதி சட்டக் கல்லூரி யில் படிக்கும் மாணவர்கள் ஐந்து பேர், ஜோலார்பேட்டை ரயில் என்ஜின் மீது ஏறி நின்று, ரயிலை செல்லவிடாமல் மறித்த னர். இதையடுத்து, திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்துவந்து மறியலில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து 15 நிமிடம் தாமதமாக ஜோலார் பேட்டை ரயில் சென்னையை நோக் கிச் சென்றது.
பிறகு மறியலில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்களான திருவள்ளூர் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள ஜார்ஜ் மில்லர் (34), ஜெய சீலன் (24), கார்த்திக் (24), ஜீவானந்தம் (23), பிரேம்குமார் (23) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.