பொன்னேரி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மனை வியை கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள கரளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (29). இவருக்கும் தச்சூர் கூட்டுரோட்டை சேர்ந்த ரம்யாவுக்கும் (26) கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு 6 வயது மற்றும் 4 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
பொன்னேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பஸ் கிளீனராக பணிபுரிந்து வந்த நாகராஜ், ஒரு மாதத்துக்கு முன்பு அதே பகுதியில் உள்ள முஸ்லிம் நகரில் வாடகை வீடு ஒன்றில் குடியேறினார். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால், குழந்தைகள் இருவரும் ரம்யாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தனர்.
நாகராஜ்-ரம்யா தம்பதி இடையே குடும்ப பிரச்சினை கார ணமாக அடிக்கடி தகராறு ஏற் பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவும் தகராறு முற்றியுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த நாகராஜ், மனைவியின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் கத்தியால் வெட்டி கொலை செய் ததாக கூறப்படுகிறது. பிறகு தாமும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரி கிறது. நேற்று காலை நீண்ட நேரமாகியும் நாகராஜ் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேக மடைந்த அக்கம்பக்கத்தினர், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த் துள்ளனர். தம்பதி இருவரும் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பொன் னேரி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.