தமிழகம்

நெல் கொள்முதல் விலை அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது: முத்தரசன்

செய்திப்பிரிவு

நெல்லுக்கான விலையை மத்தியஅரசு ரூ.50 மட்டுமே உயர்த்தி அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' நெல்லுக்கான விலையை மத்தியஅரசு ரூ.50 மட்டுமே உயர்த்தி அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

விவசாயிகளுக்கான மானியங்களை குறைத்துவிட்ட மத்தியஅரசு இடுபொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவில்லை, விவசாயிகள் பெறும் பயிர் கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இடுபொருள் விலை உயர்வு, பயிர்க்கடனுக்கான வட்டி அதிகரிப்பு கட்டுப்படியான விலை இல்லாமை இதன் காரணமாக விவசாயிகள் தற்கொலை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது.

வேளாண் விஞ்ஞானி, விவசாயிகள் உற்பத்தி பொருள்களுக்கு, விலை நிர்ணம் செய்யும் போது, உற்பத்தி செலவை கணக்கிட்டு, மேலும் 50 சதம் கூடுதல் விலை நிர்ணயம் செய்திட வேண்டுமென்று பரிந்துரை செய்து பல ஆண்டுகள் ஆன பின்னரும்கூட, முந்தைய காங்கிரஸ் அரசும் நிறைவேற்றிட வில்லை,

தற்போதைய பாஜக அரசும் கண்டு கொள்ளவில்லை. நாட்டின் 70 சதவிதம் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அம்மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அரசு சுவாமிநாதன் குழு பரிந்துரையை உடனடியாக அமுல்படுத்திட வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT