தமிழகம்

15 ஆண்டுகளாக மந்தகதியில் மேடவாக்கம் சாலை விரிவாக்கம்: விரைவில் முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

பதினைந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் மேடவாக்கம் பிரதான சாலை விரிவாக்கப் பணிகளை விரைவில் முடிக்க ‘தி இந்து’ உங்கள் குரல் மூலம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மேடவாக்கத் தில் 15 ஆண்டுகளாக வசிக்கும் ஏ.ஸ்ரீகுமார் ‘தி இந்து’ உங்கள் குரலில் கூறியதாவது:

பரங்கிமலை முதல் மேடவாக் கம் வரை செல்லும் 9 கி.மீ நீளமுள்ள மேடவாக்கம் பிரதான சாலையை விரிவாக்கும் பணிகள் 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இது தவிர பறக்கும் ரயில் நிலைய பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

முக்கியமான பேருந்து வழித்தட சாலையான மேடவாக்கம் பிரதான சாலை, புழுதிவாக்கம், உள்ளகரம், மடிப் பாக்கம், கீழ்கட்டளை, ஆதம்பாக் கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளை இணைப்பதாக உள்ளது. ஆதம்பாக்கம் அருகில் 20 அடியாக இந்த சாலை குறுகுகிறது. அங்கு ஒரு பேருந்து மட்டுமே ஒரு நேரத்தில் செல்ல முடியும். போக்குவரத்து நெருக்கடி காரணமாக சாலையிலிருந்து பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு செல்வதே பெரும்பாடாகி விடுகிறது. காலை நேரத்தில் அலுவலகம் செல்லும் அவசரத்தில் பல விபத்துகள் நடைபெறுகின்றன.

இந்த பகுதியில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை நெறிப்படுத்த போக்குவரத்து காவல்துறையினர் யாரும் இங்கு இருப்பதில்லை. சில நேரங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் தான் அந்தப் பணியை செய்கின்றனர்.

சாலை விரிவாக்கத்துக்காக ஆக்கிரமிப் புகள் அகற்றப்பட்ட இடங்களில் அதற்கு பிறகு பணிகள் நடைபெறவில்லை. மேடவாக்கம் கூட்ரோட்டில், ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்ட இடத்தில், தனியார் திருமண மண்டபம், வணிக வளாகங் கள் வாகன நிறுத்தமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு சில இடங்களில் மட்டுமே புதிதாக சாலை போடப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்த சாலையில் இடம் இருக் கும் இடங்களில் சாலை விரிவாக் கம் செய்யப்பட்டு விட்டது. சில இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் வெவ்வேறு நிலைகளில் உள்ளன. நிலம் கையக்கப்படுத்தப்பட்ட பிறகு, பணிகள் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT