மருத்துவப் பணியாளர் தேர்வா ணையத்தின் தேர்வுகளை நடத்த மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் உள்ளிட்டோர் தேர்வு அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அரசுப் பணியா ளர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் செயல்பட்டு வருகிறது. காவல், சிறை மற்றும் தீயணைப்பு பணியாளர்களை தேர்வு செய்ய சீருடைப் பணியாளர் தேர்வாண யமும், வனத்துறைக்கு வனச் சீருடை பணியாளர் தேர்வாணை யமும் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல மருத்துவப் பணியாளர்களான மருத்துவர், மருந்தாளுநர், செவிலியர் போன் றோரை தேர்வு செய்ய மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் அமைக்கப்பட்டன. இந்த ஆணையம் சார்பில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு நடந்து வருகின்றன.
இந்நிலையில், தேர்வுகளை நடத்தவும் கண்காணிக்கவும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிப்பது தொடர்பாக அரசுக்கு மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் தலைவர் கடிதம் எழுதினார். இதை பரிசீலித்த தமிழக அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் வெளியிட்ட அரசாணையில், ‘மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரிகள், சார் ஆட்சியர்கள் மற்றும் வருவாய் மண்டல அதிகாரிகள் ஆகியோர் நிரந்தர அடிப்படையில் எதிர்காலத்தில் மருத்துவப் பணியாளர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவர். சென்னை மாவட்டத்தில், மாவட்டக் கல்வி அதிகாரி ஒருவர் தலைமை ஒருங்கிணைப்பாளராக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நியமிக்கப்படுவார்’ என்று கூறப்பட்டுள்ளது.