தமிழகம்

விவசாயிகள் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஏழை, எளிய மாண வர்களுக்கு கற்றல் உபகரணங் கள் வழங்கப்பட்டன.

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கரலப் பாக்கத் தில் நடந்த விழாவில் கரல பாக்கம், அருந்ததிபாளையம், பெரியார் நகர், கீழ்கொண்டை யார், சிவன்வாயல், பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் 10- ம் வகுப்பு வரை படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் 110 பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதில் நோட்டு, பேனா, பென் சில், ஜாமன்ட்ரி பாக்ஸ், புத்தகப் பை உள்ளிட்ட உபகரணங் கள் இடம்பெற்றிருந்தன.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சென்னை புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் தசரதன், செயலாளர் பால்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சி.சுந்தர்ராஜ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT