ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக் கணித்ததன் மூலம் எதிர்க்கட்சி களின் பலவீனம் வெட்ட வெளிச்ச மாகியுள்ளது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இடைத்தேர் தல் போட்டியிலிருந்து எதிர்க்கட்சி கள் விலகியிருப்பதன் மூலம் அவர் களின் பலவீனமும் அதிமுகவின் பலமும் வெட்ட வெளிச்சமாகிறது.
வாக்காளர்களின் தீர்ப்பு, ஜெயலலிதாவின் நல்லாட்சிக்கு வலுவூட்டும் விதமாக அமையும் என்பது உறுதி. எங்கள் இயக்கத் தோழர்கள் தொகுதி முழுவதும் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நாள் வரை, அதே வேகத்தோடு சோர்வில்லாமல் பணியாற்றிட அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.