தமிழகம்

ராமநாதபுரம் இசை பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் அரசு இசைப் பள்ளி சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருத ங்கம் ஆகிய துறைகளுக்கு 3 ஆண்டு சான்றிதழ் பயிற்சிக்கு சேர்க்கை தொடங்குகிறது.

8-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இசைப் பள்ளியில் சேரலாம். முதல் ஆண்டுக் கட்டணம் ரூ. 152 மட்டுமே. இசை பயிலும் மாணவர்களுக்கு பஸ் பயண அட்டை, மாதந்தோறும் ரூ. 400 கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பங்களைப் பெற தலைமை ஆசிரியர், அரசு இசைப் பள்ளி, கவுரி விலாஸ், அரண்மனை வீதி, ராமநாதபுரம் என்ற முகவரியில் அணுகலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT