தமிழகம்

ஆதரவற்றவர்களுக்கான இல்லங்கள் அமைக்க மாநகராட்சி தீவிரம்: தொண்டு நிறுவனங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது மாநகராட்சி

செய்திப்பிரிவு

சென்னையில் ஆதரவற்றவர் களுக்கான இல்லங்களை அமைக்க தொண்டு நிறுவனங்களை எதிர் பார்த்து காத்திருக்கிறது மாநக ராட்சி.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஒரு லட்சம் பேருக்கு ஒரு இல்லம் இருக்க வேண்டும். சுமார் 67 லட்சம் மக்கள் தொகை கொண்ட சென்னையில் 70 ஆதரவற்றோர் இல்லங்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது கொடுங்கையூர், புது வண்ணாரப்பேட்டை, தண்டை யார்பேட்டை உள்ளிட்ட 28 இடங் களில் மட்டுமே இல்லங்கள் உள் ளன. மீதி இல்லங்களை அமைக்க தொண்டு நிறுவனங்கள் முன் வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது மாநகராட்சி. அனுபவமுள்ள தொண்டு நிறு வனங்கள் இல்லங்களை அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மன்றக் கூட்டத்திலேயே மேயர் அறிவித்திருந்தார்.

2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி நடத்திய கணக்கெடுப் பில், 11 ஆயிரத்து 116 பேர் பேர் வீடற்று இருப்பதாக தெரியவந்தது. தற்போது இவர்களின் எண்ணிக்கை சுமார் 15 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இவர்களுக்காக சென்னையில் 5 குழந்தைகள் காப்பகங்கள், 7 குழந்தைகள் மற்றும் பெண் களுக்கான காப்பகங்கள், 2 முதியோர் காப்பகங்கள் உள்ளிட்ட 28 காப்பகங்கள் உள்ளன. ஒவ்வொரு காப்பகத்திலும் 30 முதல் 50 பேர் தங்குகின்றனர். இந்த காப்பகங்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு காப்பகத்துக்கும் ஆண்டுக்கு ரூ.13.95 லட்சம் மாநகராட்சி செலவிடுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:

ஆதரவற்றோர் இல்லங்களை நடத்த உண்மையான சேவை குணம் மிக்க தொண்டு நிறுவனங்களை தேடி வருகிறோம்.உதவி வேண்டி வருபவர்களின் நிலை புரிந்து நடந்து கொண்டு அவர்கள் பணி யாற்ற வேண்டும்.

சரியான அமைப்பு முன் வந்தால், உடனே பணிகளை தொடங்க தயாராக இருக்கிறோம். வெளியூர்களிலிருந்து வேலை தேடி வருபவர்கள், சில மாதங்கள் படிக்க வருபவர்களும் இல்லங்களில் தங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT