தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் திருப்பதிக்கு வந்தார். அவரை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் தலைமுடி காணிக்கை செலுத்தி சுவாமி தரிசனம் செய்த அவர் அன்று இரவு திருமலையிலேயே தங்கினார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை விஐபி பிரேக் தரிசன நேரத்தில் மீண்டும் ஏழுமலையானை தரிசனம் செய்தார். இவருக்கு தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரங்கள், தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.