தமிழகம்

குடிநீர் தட்டுப்பாடு: பெண்கள் மறியல்

செய்திப்பிரிவு

கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட லெட்சுமி நகரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கி வருகிறது.

இந்நிலையில், லெட்சுமி நகர் பகுதி முழுவதும் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. நாள் தோறும் குடிநீர் விநியோக்கிக்க வலியுறுத்தி திருத்தணி-அரக் கோணம் சாலையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர், திருத்தணி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். லெட்சுமி நகர் பகுதி முழுமைக்கும் நாள்தோறும் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

SCROLL FOR NEXT