தமிழகம்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க சரத்குமார் கோரிக்கை

செய்திப்பிரிவு

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க மத்திய அரசு ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழக கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.760 கோடியை உடனடியாக தரவேண்டும் என்று சமக தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ச ர்க்கரை ஆலைகள் ரூ.760 கோடி பாக்கி வைத்துள்ளன. சில தனியார் ஆலைகள் 2 ஆண்டுகளாக பணம் கொடுக்கவில்லை. இந்த தருணத்தில் மத்திய அரசு கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை கொடுப்பதற்கு இந்தியா முழுமைக்கும் சேர்த்து ரூ 6 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.6 ஆயிரம் கோடியிலிருந்து தமிழக விவசாயிகளுக்கு, சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய ரூ.760 கோடியையும் முழுமையாக வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT